Skip to main content

Command Palette

Search for a command to run...

டி.வி., ஏசி உள்ளிட்ட 175 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறையவுள்ளதா? ஜிஎஸ்டி கவுன்சில் இன்று–நாளை ஆலோசனை.

Published
1 min read
டி.வி., ஏசி உள்ளிட்ட 175 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறையவுள்ளதா? ஜிஎஸ்டி கவுன்சில் இன்று–நாளை ஆலோசனை.
E

Ezhuchi Ezhuthu delivers news that paves the way for social change in Tamil. A blog that amplifies people’s voices and works for justice.

ஜிஎஸ்டி அடுக்குகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது.

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியையொட்டி ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 4 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி-யை 2ஆக குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என உள்ள அடுக்குகளை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் மட்டும் இருக்கும் வகையில் மாற்றியமைக்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 56ஆவது கூட்டம் தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வரி அடுக்கு அளவுகளைக் குறைப்பது, வரி சீர்திருத்தம், வரி செலுத்துவது மற்றும் கணக்கு தாக்கலுக்கான நடைமுறைகளை எளிதாக்குவது ஆகியவை குறித்து ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டி.வி, ஏ.சி. உள்ளிட்ட 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

More from this blog

ஒரு பைசா செலவின்றி 100% மானியத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம்: முழுமையான விண்ணப்ப வழிகாட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் சார்பில் ஆதிதிராவிடர் விவசாயிகள் ராஷ்டீரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தில் " ஒரு துளி நீரில் அதிக பயிர் " என்ற திட்டத்தில் 100 சதவீதம் மானியம். தோட்டக்கலை துறையின் சார்பில் 2025 - 2026-ம் நிதியாண்டின் சார்...

Sep 3, 20251 min read
ஒரு பைசா செலவின்றி 100% மானியத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம்: முழுமையான விண்ணப்ப வழிகாட்டி

சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்கள்

சீனாவில் நடைபெற உள்ள பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பெய்ஜிங் சென்றடைந்தார். 2ஆம் உலக போரில் ஜப்பான் தங்களிடம் சரணடைந்ததை கொண்டாடும் வகையில் சீனாவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.. இதில் 26 நாடுகளின்...

Sep 3, 20251 min read
சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்கள்
E

Ezhuchi Ezhuthu

3 posts

Ezhuchi Ezhuthu delivers news that paves the way for social change in Tamil. A blog that amplifies people’s voices and works for justice.